வேகமெடுத்த மாண்டஸ் புயல்: தற்போதய நிலை என்ன?


வேகமெடுத்த மாண்டஸ் புயல்: தற்போதய நிலை என்ன?
x

வட தமிழக கடற்கரை பகுதிகளில் 75 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வடகிழக்கு பருவமழை காலம் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. தொடக்கத்தில் ஓரளவு மழை பெய்தாலும் கடந்த மாதத்தின் பிற்பாதியில் இருந்து மழை குறைந்து காணப்படுகிறது. சில இடங்களில் மழை பெய்தாலும், பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையும், பனிப் பொழிவுமாக இருந்தது.

இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது வலுவடைந்து புயலாக மாறும் என்றும் அதனால் தமிழகத்துக்கு ஓரளவு மழை இருக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்று முன்தினம் தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.

தொடர்ந்து தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று காலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

வங்ககடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயலின் வேகம் மணிக்கு 6 கி.மீ வேகத்தில் இருந்து 11 கி.மீ ஆக அதிகரித்துள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்க கூடும் எனவும், வட தமிழக கடற்கரை பகுதிகளில் 75 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் தற்போது 6 கி.மீ வேகத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. சென்னையில் இருந்து 580 கி.மீ தொலைவிலும், காரைக்காலில் இருந்து 500 கி.மீ தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. நாளை நள்ளிரவு புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே மாண்டஸ் புயல் கரையை கடக்கிறது.


Next Story