போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றி திரியும் மாடுகள்


போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றி திரியும் மாடுகள்
x

செங்கத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை

செங்கம்

செங்கத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

சாலையில் மாடுகள்

செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முக்கிய சாலைகளான செங்கம் - போளூர் சாலை, ராஜவீதி, பெருமாள் கோவில் தெரு, மில்லத் நகர், தளவாநாயகன்பேட்டை உள்பட பல்வேறு முக்கிய இடங்களில் மாடுகள் அதிக அளவில் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றி திரிகிறது.

மேலும் மாடுகள் ஒன்றோடு ஒன்று முட்டிக் கொள்வதால் வாகன ஓட்டிகள் சாலையில் பயத்துடன் மாடுகளை கடந்து செல்கின்றனர்.

இரவு நேரங்களில் சாலையின் நடுவே மாடுகள் வழிமறித்து படுத்துக்கொள்வதால் மாடுகள் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் மாடுகளின் மீது மோதி விபத்து ஏற்படுகிறது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

போக்குவரத்திற்கு இடையூறாகவும் வாகன ஓட்டிகளையும், பாதசாரிகளையும் குறிப்பாக சாலையில் செல்லும் பள்ளி குழந்தைகள், முதியவர்கள், பெண்களை அச்சுறுத்தி வரும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து மாடுகளை பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் விபத்துகள் நடைபெறும் முன்பே சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து திருவண்ணாமலை கோ சாலையில் விட மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story