அரசு கலை-அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு


அரசு கலை-அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு
x

அரசு கலை-அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு சிறப்பு ஒதுக்கீட்டிற்கு இன்று நடக்கிறது.

பெரம்பலூர்

குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டின் இளங்கலை பட்டப்படிப்பிற்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்த மாணவ-மாணவிகளுக்கு சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்குகிறது. இன்று முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், தேசிய மாணவர் படை, விளையாட்டு வீரர்கள், அந்தமான் நிகோபார் மாணவர்கள் ஆகியோருக்கான சிறப்பு ஒதுக்கீட்டிற்கு கலந்தாய்வுஅனைத்து பாடப்பிரிவுகளுக்கும் நடைபெறுகிறது. முதல் பொது கலந்தாய்வில் முதல் கட்டமாக நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தமிழ், ஆங்கிலம் பாடப்பிரிவுகளுக்கும், 2-ந் தேதி வணிகவியல் பாடப்பிரிவுக்கும், 3-ந்தேதி அனைத்து அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 6-ந் தேதி அனைத்து கலை பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது. முதல் பொது கலந்தாய்வில் 2-ம் கட்டமாக வருகிற 7-ந் தேதி தமிழ், ஆங்கிலம் பாடப்பிரிவுகளுக்கும், 8-ந் தேதி வணிகவியல் பாடப்பிரிவுக்கும், 9-ந் தேதி அனைத்து அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 10-ந் தேதி அனைத்து கலை பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது. கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவ-மாணவிகள் இணையதள விண்ணப்ப நகல், மாற்று சான்றிதழ், 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், சிறப்பு இட ஒதுக்கீட்டிற்கான சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் 5 நகல் சான்றிதழ்கள் மற்றும் விண்ணப்ப படிவ நகல், 5 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றுடன் கல்லூரிக்கு 9.30 மணிக்குள் வர வேண்டும். 2-ம் கட்ட பொது கலந்தாய்வு வருகிற 12-ந்தேதி முதல் நடைபெறலாம். அதற்கான தேதி பின்னர் தெரிவிக்கப்படும், என்று கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story