மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு


மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு
x

மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது.

திருச்சி

அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. அதன்படி திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று சிறப்பு ஒதுக்கீடு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது. இங்கு 15 பாடப்பிரிவுகளில் சிறப்பு ஒதுக்கீட்டில் மொத்தம் 126 இடங்களுக்கு 1,928 பேர் விண்ணப்பித்து இருந்தனர். நேற்று 150 பேர் கலந்து கொண்டனர். இது குறித்து கல்லூரி முதல்வர் விஜயலெட்சுமி கூறுகையில், நடப்பாண்டில் தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் அதிக மாணவர்கள் விண்ணப்பித்துள்ள கல்லூரிகளின் மாநில அளவிலான பட்டியலில் தந்தை பெரியார் கல்லூரிக்கு 5-வது இடம் கிடைத்துள்ளது. சிறப்பு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வை தொடர்ந்து வருகிற 1-ந்தேதி வணிகவியல், 2-ந் தேதி கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புவியியல், புள்ளியியல், கணினி அறிவியல், காட்சித் தொடர்பியல், கணினி பயன்பாட்டியல் ஆகிய அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 3-ந் தேதி வரலாறு, பொருளியல் பாடப் பிரிவுகளுக்கும், 5-ந் தேதி தமிழ், ஆங்கிலம் பாடப் பிரிவுகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

இதற்கு விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவிகளில் மதிப்பெண் அடிப்படையில் தகுதியுடையவர்கள் செல்போன் மூலம் அழைக்கப்பட்டு வருகின்றனர். முதல்கட்ட கலந்தாய்வில் மாணவர்கள் சேர்க்கை முழுமையடையாதபட்சத்தில், அடுத்தடுத்த கட்டங்களில் மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படும், என்றார்.


Next Story