மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம்


மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம்
x
தினத்தந்தி 21 Feb 2023 12:15 AM IST (Updated: 21 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம் செய்தனர்.

தென்காசி

தென்காசி மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் அதன் தலைவி தமிழ்ச்செல்வி தலைமையில் நேற்று நடைபெற்றது. துணைத் தலைவர் உதய கிருஷ்ணன், செயலாளர் ருக்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திட்டப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி குறித்த தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. அப்போது கவுன்சிலர்கள் அனைத்து வார்டுகளுக்கும் நிதியை சமமாக பகிர்ந்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றவே தலைவி தமிழ்ச்செல்வி, தான் மிரட்டப்பட்டதாகவும், அதனால் இவ்வாறு செய்ய நேரிட்டது எனவும் கூறினார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது கவுன்சிலர்கள் தலைவிக்கு எதிராக மீண்டும் வாக்குவாதம் செய்தனர். இவ்வாறாக பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய இந்த கூட்டம் முடிவடையும் சூழலில் தலைவி கூட்டத்தில் வைக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் ஒத்தி வைக்கப்படுவதாக கூறியதை தொடர்ந்து அனைவரும் கூட்டத்தை விட்டு வெளியேறினர்.


Next Story