ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை கூடத்தில் ரூ.1¼ கோடிக்கு பருத்தி ஏலம்


ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை கூடத்தில் ரூ.1¼ கோடிக்கு பருத்தி ஏலம்
x

ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை கூடத்தில் ரூ.1¼ கோடிக்கு பருத்தி ஏலம் போனது.

அரியலூர்

மறைமுக ஏலம்

பெரம்பலூர் விற்பனைக்குழுவிற்குட்பட்ட அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனைக்கூடத்தில் பருத்தி கொள்முதலுக்கான மறைமுக ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் அரியலூர் மாவட்டமின்றி, பெரம்பலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருப்பூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

அவர்கள் விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் நன்கு உலர வைத்து கொண்டு வந்திருந்த பருத்தியை நல்ல விலை கோரி கொள்முதல் செய்தனர்.

ரூ.1¼ கோடிக்கு பருத்தி ஏலம்

இதில் அதிகபட்சமாக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9 ஆயிரத்து 329-க்கு விலை போனது. குறைந்த பட்சமாக பருத்தி குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 907-க்கும், சராசரி விலையாக பருத்தி குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 879-க்கும் விலை போனது. மறைமுக ஏலத்தில் மொத்தம் 1,155 குவிண்டால் பருத்தி 636 விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டன. மறைமுக ஏலம் மூலம் ரூ.1 கோடியே 36 லட்சத்துக்கு பருத்தி விற்பனை செய்து கொடுக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் விற்பனைக்குழு செயலாளர் சுரேஷ்பாபு, வேளாண்மை துணை இயக்குனர் சிங்காரம் மற்றும் விற்பனைக்கூட அதிகாரிகள் செய்திருந்தனர்.

மேலும் பிரதிவாரம் வியாழக்கிழமைதோறும் ஜெயங்கொண்டம் வேளாண்மை விற்பனை கூடத்தில் பருத்திக்கான மறைமுக ஏலம் நடைபெறும். அதனால் விவசாயிகள் அவசரப்படாமல் தங்களின் பருத்தியை நன்கு வெடிக்க வைத்து எடுக்க வேண்டும். அதோடு மட்டுமின்றி பருத்தியை நன்கு உலரவைத்து புதன்கிழமை மாலை 6 மணிக்குள் விற்பனைக்கு எடுத்து வர வேண்டும் என்று விற்பனை கூட அதிகாரிகள் விவசாயிகளை கேட்டு கொண்டுள்ளனர்.


Next Story