கோனேரிப்பட்டியில் ரூ.72 லட்சத்துக்கு பருத்தி ஏலம்


கோனேரிப்பட்டியில் ரூ.72 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
x

கோனேரிப்பட்டியில் ரூ.72 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.

சேலம்

தேவூர்:

கோனேரிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தின் பருத்தி விற்பனை சேவை மையத்தில் நேற்று நடைபெற்ற பருத்தி டெண்டரில் நெடுங்குளம், கல்வடங்கம் ஒக்கிலிப்பட்டி, தண்ணிதாசனூர், செங்கானூர், கொட்டாயூர், பொன்னம்பாளையம், பூதப்பாடி, அம்மாபேட்டை, காவேரிபட்டி, தேவூர், கோனேரிப்பட்டி சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு சென்றனர். இதில் நாமக்கல், சேலம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டனர். மொத்தம் 1,800 பருத்தி மூட்டைகள் ஏலம் விடப்பட்டது. இதில் பி டி ரகப் பருத்தி குவிண்டால் குறைந்தபட்ச விலையாக 9 ஆயிரத்து 650ரூபாய் முதல் அதிகபட்ச விலையாக 11 ஆயிரத்து 980ரூபாய் வரை ஏலம் போனது. மொத்தம் 1,800 பருத்தி மூட்டைகள் ரூ. 72 லட்சம் ரூபாய்க்கு ஏலம் நடைபெற்றது.


Next Story