அரூரில் ரூ.40 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
தர்மபுரி
அரூர்:
அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். தர்மபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து ஏலத்தில் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் நேற்று நடந்த ஏலத்தில் 420 விவசாயிகள் 1,600 பருத்தி மூட்டைகளை கொண்டு வந்திருந்தனர். இதில் ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.7,866 வரையும், டி.சி.எச். ரக பருத்தி ரூ.8 ஆயிரம் முதல் ரூ.8,600 வரை விற்பனை ஆனது. மொத்தம் ரூ.40 லட்சத்திகு பருத்தி ஏலம் போனதாக செயலாளர் அறிவழகன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story