ரூ.72 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம்


ரூ.72 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம்
x
தினத்தந்தி 14 Sep 2023 11:15 PM GMT (Updated: 14 Sep 2023 11:15 PM GMT)

செஞ்சேரி மலையடிபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.72 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் போனது.

கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை வட்டாரம் செஞ்சேரிமலையடிபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அரசு சார்பில், விவசாயிகளிடம் இருந்து கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. கொள்முதல் இலக்கு நிறைவடைந்தவுடன் சமீபத்தில் கொள்முதல் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், கொப்பரை விவசாயிகள் நலன்கருதி செஞ்சேரி மலையடிபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இ-நாம் (ஆன்லைன்) திட்டத்தின் கீழ் தேங்காய் பருப்பு ஏலம் இணைய முறையில் தொடங்கப்பட்டது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஏலம் நடைபெற்றது. ஏலத்திற்கு செஞ்சேரிமலை, செஞ்சேரி, செஞ்சேரிப்புத்தூர் உள்பட பல இடங்களில் இருந்து 15 விவசாயிகள் 9 ஆயிரத்து 500 கிலோ கொப்பரையை கொண்டு வந்து இருந்தனர். ஆன்லைன் மூலம் 7 வியாபாரிகள் ஏலம் எடுத்தனர். இதில் ஒரு கிலோ கொப்பரை தேங்காய் ரூ.59 முதல் ரூ.78.80 வரை ஏலம் போனது. மொத்தம் ரூ.72 ஆயிரத்து 709-க்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.

இந்த தகவலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் தமிழரசன் தெரிவித்தார்.


Related Tags :
Next Story