குன்னூர் டான் பிராட்மேன் அணி வெற்றி


குன்னூர் டான் பிராட்மேன் அணி வெற்றி
x
தினத்தந்தி 10 Sep 2023 10:15 PM GMT (Updated: 10 Sep 2023 10:15 PM GMT)

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் குன்னூர் டான் பிராட்மேன் அணி வெற்றி பெற்றது.

நீலகிரி

கோத்தகிரி

நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான ஏ, பி மற்றும் சி டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள் கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று நடைபெற்ற ஏ டிவிஷன் (முதல் டிவிஷன்) பிரிவிற்கான லீக் போட்டியில் குன்னூர் டான் பிராட்மேன் அணியும், ஊட்டி ஸ்பார்டன் அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த ஊட்டி ஸ்பார்டன் அணி நிர்ணயிக்கப்பட்ட 35 ஓவர்களில், 31.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் எடுத்தது. இந்த அணி வீரர்கள் சோமசுந்தரம் 45 ரன்கள் (அவுட் இல்லை), சஞ்சய் 35 ரன்கள் எடுத்தனர். குன்னூர் டான் பிராட்மேன் அணியின் பந்து வீச்சாளர்கள் ஜோசப், நந்தகுமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய குன்னூர் டான் பிராட்மேன் அணி 34.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இந்த அணி வீரர்கள் மேத்யூஸ் 70 ரன்கள் (அவுட் இல்லை), பிரகாஷ் 37 ரன்கள், தினேஷ் 27 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குன்னூர் டான் பிராட்மேன் அணி வெற்றி பெற்றது.


Related Tags :
Next Story