நுகர்வோர் கோர்ட்டு பணியிடங்களை நிரப்புவதில் இறுதி முடிவு எடுக்கக்கூடாது-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

நுகர்வோர் கோர்ட்டு பணியிடங்களை நிரப்புவதில் இறுதி முடிவு எடுக்கக்கூடாது-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

நுகர்வோர் கோர்ட்டு பணியிடங்களை நிரப்புவதில் இறுதி முடிவு எடுக்கக்கூடாது-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை

மதுரை வளையங்குளத்தைச் சேர்ந்த சுந்தரராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட விதிகளின்படி நாடு முழுவதும் உள்ள அந்தந்த மாநில நுகர்வோர் கோர்ட்டு, மாவட்ட கோர்ட்டின் தலைவர், உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க உரிய விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவர்களுக்கு ஒரே மாதிரியான தகுதிகள் நிர்ணயிக்கப்படாததால், இந்த விதிகளை திருத்தம் செய்யும்படி பல வழக்குகள் தொடரப்பட்டன. அதன்பேரில் ஒரு வழக்கை விசாரித்த மும்பை ஐகோர்ட்டு, இந்த விதிகளில் சிலவற்றை ரத்து செய்தது. அதனடிப்படையில் தமிழகத்திலும் நுகர்வோர் கோர்ட்டு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஸ்ரீமதி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், நுகர்வோர் கோர்ட்டு தலைவர், உறுப்பினர்களை தேர்வு செய்யும் பணிகளை நடத்தலாம். இறுதி முடிவு எடுக்கக் கூடாது. இந்த வழக்கு குறித்து நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story