காங்கிரஸ் கட்சியினர் மறியல்


காங்கிரஸ் கட்சியினர் மறியல்
x

காங்கிரஸ் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்


ராகுல் காந்திக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை கண்டித்து விருதுநகரில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நகர் கருமாதி மடம் அருகில் மாவட்ட குழு உறுப்பினர் வெயிலுமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் கலந்து ெகாண்ட மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணசாமி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மீனாட்சி சுந்தரம், நகர காங்கிரஸ் தலைவர் நாகேந்திரன், சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர்கள் வக்கீல் சீனிவாசன், சிவகுருநாதன் மற்றும் 21 பெண்கள் உள்பட 44 பேர் கைது செய்யப்பட்டனர்.


Related Tags :
Next Story