காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Jan 2023 6:45 PM GMT (Updated: 19 Jan 2023 6:47 PM GMT)

பழனி, ஒட்டன்சத்திரம், செம்பட்டியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம்

திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், ஒட்டன்சத்திரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் சதீஸ்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கவர்னரை கண்டித்தும், உடனே அவரை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தியும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

ஒட்டன்சத்திரம் நகர தலைவர் காளிமுத்து, வட்டார தலைவர்கள் அசரப் (ஒட்டன்சத்திரம்), தர்மர் (குஜிலியம்பாறை), ராஜரத்தினம் (வடமதுரை), பாலசுப்பிரமணி (தொப்பம்பட்டி), பண்ணைக்காடு பேரூராட்சி தலைவர் கார்த்திக், வேடசந்தூர் இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தொகுதி தலைவர் கார்த்திகேயன், விவசாய அணி மாவட்ட பொதுச்செயலாளர் சோழராஜ், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர்கள் ரகுமான்சேட், சோமுராஜ், பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஞானசேகரன், ராஜ்குமார் மற்றும் வட்டார, நகர நிர்வாகிகள் பலா் கலந்துகொண்டனர்.

செம்பட்டி

இதேபோல் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில், ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கவர்னரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

ஆத்தூர் வட்டார காங்கிரஸ் தலைவர் செல்வராஜ், ரெட்டியார்சத்திரம் வட்டார தலைவர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மச்சக்காளை, மணிவண்ணன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரபாகரன், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் ரசூல் முகைதீன், எஸ்சி., எஸ்.டி. மாவட்ட தலைவர் பரமன், காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் முருகேசன், சிதம்பரம், சகாயராஜ், மாவட்ட நிர்வாகி உதயகுமார், மாவட்ட மகளிர் அணி தலைவி முருகேஷ்வரி மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பழனி

பழனி பஸ்நிலைய ரவுண்டானாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் உதயசங்கர் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சர்தார்கான், முருகானந்தம், பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது தமிழக கவர்னரை கண்டித்தும், அவருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கருப்பையா (இலக்கிய பிரிவு), நாசர் (சிறுபான்மை பிரிவு), கருப்பசாமி (கலைப்பிரிவு), நகர பொறுப்பாளர் மாசிலாமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story