அரியலூர் அரசு மருத்துவமனை நிர்வாகம் மருந்து, மாத்திரைகள் வழங்கியதற்கான ரூ.65¼ லட்சம் வழங்கவில்லை என புகார்


அரியலூர் அரசு மருத்துவமனை நிர்வாகம் மருந்து, மாத்திரைகள் வழங்கியதற்கான ரூ.65¼ லட்சம் வழங்கவில்லை என புகார்
x

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் மருந்து, மாத்திரைகள் வழங்கியதற்கான ரூ.65¼ லட்சம் வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த ஆண்டு பல்வேறு நிறுவனங்கள் சார்பில் மொத்தம் ரூ.65¼ லட்சம் மதிப்பிலான மருந்து, மாத்திரைகள் வழங்கியதற்கான தொகையை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் இதுவரை வழங்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதுகுறித்து முதல்வரிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்-அமைச்சர் ஆகியோரது கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வருகிற 23-ந் தேதி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அலுவலகம் முன்பாக பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம் பிச்சை எடுக்கும் போராட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனுமதி வழங்கக்கோரி மருந்துகள் வழங்கியவர்கள் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு காமராஜிடம் மனு அளித்தனர்.


Next Story