புகார்பெட்டி


புகார்பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மதுரை

எரியாத தெருவிளக்குகள்

மதுரை மாவட்டம் குருதியேட்டர் சிக்னல் சந்திப்பில் இருந்து வைகை காமராஜர் பாலம், பாத்திமா கல்லூரி ரவுண்டானா வரை உள்ள தெரு விளக்குகள் எரியாமல் உள்ளது. போக்குவரத்து பிரதான மிக்க இந்த சாலையில் தினந்தோறும் ஏராளமான வாகனஓட்டிகள் பயணிக்கின்றனர். இருள் சூழ்ந்து காணப்படுவதால் இந்த பாதையை பயன்படுத்துவதை பயணிகள் தவிர்த்து வருகின்றனர். மேலும் இருட்டை பயன்படுத்தி வழிப்பறி போன்ற சம்பவங்களும் நிகழ வாய்ப்பு உள்ளது. எனவே இந்த பகுதியில் உள்ள தெருவிளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனோகரன், மதுரை.

திறந்து கிடக்கும் மின்சார பெட்டி

மதுரை அண்ணாநகர் சிக்னல் கிழக்கு பகுதியில் மின்சார பெட்டிகள் திறந்த நிலையில் உள்ளன. இதன் ஆபத்தை அறியாத பொதுமக்கள் அதன் அருகில் வாகனங்களை நிறுத்துவது, நின்று பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். தற்போது மழை காலம் என்பதால் இவ்வாறு திறந்த நிலையில் காணப்படும் மின்சார பெட்டிகளால் மின்விபத்துகள் நிகழ வாய்ப்பு உள்ளது. எனவே திறந்த நிலையில் காணப்படும் மின்சார பெட்டிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவா, மதுரை.

சுகாதார சீர்கேடு

மதுரை மாவட்டம் மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டு காலனி 56-வது வார்டு பகுதியில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. கழிவுநீர் தேங்குவதால் சாலையில் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் தேங்கும் கழிவுநீரை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

சிவா, மதுரை.

குண்டும், குழியுமான சாலை

மதுரை வடக்குவெளி வீதியில் இருந்து யானைக்கல் தரைப்பாலம் செல்லும் பாதை மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சேதமடைந்த சாலையில் பயணிப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மதுரை.

திறந்து கிடக்கும் சாக்கடை மூடி

மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் டி.டி.ரோடு கண்மாய்கரை சந்திப்பில் பாதாள சாக்கடையின் மூடி சேதமடைந்து திறந்து கிடக்கிறது. இதனால் ஏற்படும் துர்நாற்றம் காரணமாக இப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே அதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஆரப்பாளையம்.


Next Story