தினத்தந்தி புகார்பெட்டி


தினத்தந்தி புகார்பெட்டி
x

புகார்பெட்டி

மதுரை

ஆக்கிரமிக்கப்பட்ட சாலை

மதுரை தெற்கு மாரட் சாலையில் தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பகுதியில் சிலர் சாலையை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் சாலையில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது. போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

அசோக்குமார், மதுரை.

பொதுமக்கள் அவதி

மதுரை மாவட்டம் மாட்டுதாவணி ஆம்னி பஸ் நிறுத்தம் சிக்னல் அருகே சிறிய மழை பெய்தால் கூட சாலையில் மழைநீர் தேங்கி விடுகிறது. இதனால் வாகனங்களை இயக்கவும், சாலையில் நடக்க முடியாமலும் பொதுமக்கள் அவதியடைகின்றனர். அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள் நடைபாதையினர் மீது மழைநீரை வாரியிறைக்கிறது. எனவே பொதுமக்கள் செல்லும் வகையில் சாலையில் பாதை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முகிலன், மாட்டுத்தாவணி.

மழைநீர் அகற்றப்படுமா?

திருமங்கலம் ரெயில் நிலையம் அருகே ரெயில்வே லைன் தெரு உள்ளது. இந்த தெருவுக்கு செல்லும் பாதையில் மழைக்காலங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி விடுகிறது. இதனால் இந்த பகுதியில் குடியிருக்கும் மக்கள் அந்தப் பாதையை கடந்து செல்ல முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து சம்பந்தப் பட்டவர்களிடம் பலமுறை முறையிட்டும் எந்த பலனும் இல்லை. தற்போது மழைக்காலம் தொடங்கியள்ளதால் இந்தப் பாதையை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குடியிருப்பு வாசிகள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டி உள்ளது. குறிப்பாக பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் முதியோர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே இந்த பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும்.

பொதுமக்கள், திருமங்கலம்.

ஆபத்தான மின்கம்பம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ரோடு பைகாரா 7-வது தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. மின்கம்பத்தின் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் உள்ளது. மழை காலம் என்பதால் பொதுமக்கள் மின்விபத்துகள் ஏற்படும் என்ற அச்சஉணர்வுடனே சாலையை கடந்து செல்கின்றனர். மேலும் மின்கம்பத்தின் அருகில் ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராசாத்தி, திருப்பரங்குன்றம்.

சாலை சீரமைக்கப்படுமா?

மதுரை மாவட்டம் தாளாய்வீதி கோமதிபுரம் 6-வது மெயின்ரோடு பகுதியில் உள்ள தார்சாலையில் கற்கள் பெயர்ந்து மண்சாலையாக மாறி வருகிறது. தற்போது மழைகாலம் என்பதால் சாலையில் மழைநீர் தேங்கி வாகனங்கள் செல்வதற்கும், பாதசாரிகள் நடப்பதற்கும் சிரமமாக உள்ளது. மேலும் வாகனஓட்டிகள் சாலையில் உண்டான சேற்றினில் சிக்கி விழுந்து காயமடைகின்றனர். எனவே இப்பகுதி சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருணாநிதி, கோமதிபுரம்.


Next Story