பங்கில் அளவு குறைவாக பெட்ரோல் அடித்ததாக புகார்


பங்கில் அளவு குறைவாக பெட்ரோல் அடித்ததாக புகார்
x

பவானி அருகே பங்கில் அளவு குறைவாக பெட்ரோல் அடித்ததாக புகார் கூறப்பட்டது. இதுதொடா்பாக அதிகாாிகள் விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

ஈரோடு

பவானி:

பவானி அடுத்த சித்தாரை சேர்ந்த வாலிபர் ஒருவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் நேற்று முன்தினம் இரவு தன்னுடைய மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் பிடித்துள்ளார். பெட்ரோல் பிடித்த பின்னர் பங்க் ஊழியர் 17 லிட்டருக்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு வாலிபர் மோட்டார்சைக்கிள் டேங்கின் கொள்ளளவு 15 லிட்டர்தான் எப்படி 17 லிட்டருக்கு பணம் கேட்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதனால் பெட்ரோல் பங்க்கின் மேலாளருக்கும், பெட்ரோல் அடிக்க வந்த வாலிபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பெட்ரோல் போடுவதற்காக வந்த வாடிக்கையாளர்கள் அங்கு குவிந்துவிட்டார்கள்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தார்கள். பின்னர் ஒரு லிட்டர் பெட்ரோலை பிடித்து பார்த்தபோது அளவு குறைவாக இருந்தது தெரிந்தது. இதையடுத்து பெட்ரோல் பிடிக்க வந்த வாலிபரிடம் தாசில்தார் புகார் மனு பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பிவைத்தார்.


Next Story