கடலூரில் இயங்காத தொழிற்சாலைக்குள் புகுந்த பொதுமக்கள் - பொருட்களை அள்ளிச் சென்றதால் பரபரப்பு


கடலூரில் இயங்காத தொழிற்சாலைக்குள் புகுந்த பொதுமக்கள் - பொருட்களை அள்ளிச் சென்றதால் பரபரப்பு
x

சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பலர் தொழிற்சாலைக்குள் புகுந்து பொருட்களை எடுத்துச் சென்றனர்.

கடலூர்,

கடலூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை அமைப்பதற்காக நடைபெற்று வந்த பணிகள், கடந்த 2011 ஆம் ஆண்டு தானே புயல் காரணமாக கைவிடப்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள காப்பர் பொருட்கள் அங்கேயே இருந்தன.

இதை அறிந்து சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பலர் தொழிற்சாலைக்குள் புகுந்து பொருட்களை எடுத்துச் சென்றனர். அவர்களை பிடிக்க சென்ற போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொழிற்சாலைக்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்தனர்.

இந்நிலையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தொழிற்சாலைக்குள் புகுந்து பொருட்களை அள்ளிச் சென்றனர். இதையடுத்து மாவட்ட எஸ்.பி. தலைமையில் அங்கு விரைந்து வந்த போலீசார் தொழிற்சாலையை சுற்றி வளைத்தனர். மேலும் பொருட்களை அள்ளிச் சென்றவர்களை போலீசார் தற்போது தேடி வருகின்றனர்.


Next Story