காமன் தகன நிகழ்ச்சி


காமன் தகன நிகழ்ச்சி
x

திருச்சிற்றம்பலத்தில் காமன் தகன நிகழ்ச்சி கும்மி அடித்து ஒப்பாரி வைத்த பெண்கள்

தஞ்சாவூர்

திருச்சிற்றம்பலம்:

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில் இருந்து 3-வது நாளில் தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் கடைவீதியில் (ரதி, மன்மதன்) காமனை உருவகப்படுத்தி தொடர்ந்து 15 நாட்கள் தினமும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மழை பெய்ய வேண்டியும், உலக நலனுக்காகவும் காமன் தகன நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு காமன் பண்டிகையின் நிறைவு நாளான நேற்று அதிகாலை 3 மணியளவில் உருவகப்படுத்தப்பட்ட காமன் அதே இடத்தில் தகனம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பெண்கள் கும்மியடித்து ஒப்பாரி வைத்தனர். அதனை தொடர்ந்து உருவகப்படுத்தப்பட்ட காமன் தீயிட்டு தகனம் செய்யப்பட்டது. இன்று(வியாழக்கிழமை) மாலை 7 மணியளவில் காமனை உயிர்பிக்கும் நிகழ்ச்சியும், மாவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை திருச்சிற்றம்பலம் பெரியான் தெரு பொதுமக்கள் செய்துள்ளனர்.


Next Story