மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தம்பதி படுகாயம்


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தம்பதி படுகாயம்
x
தினத்தந்தி 22 July 2023 6:45 PM GMT (Updated: 22 July 2023 6:46 PM GMT)

பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தம்பதி படுகாயம் அடைந்தனர்.

கடலூர்

பண்ருட்டி

பண்ருட்டி அடுத்துள்ள பணிக்கன்குப்பத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் பாலகிருஷ்ணன்(வயது 48). விவசாயியான இவர் நேற்று முன்தினம் மாலை அவரது மனைவி ராஜலட்சுமியுடன் மோட்டார் சைக்கிளில் கும்பகோணம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பண்ருட்டியில் இருந்து காடாம்புலியூர் நோக்கி வந்துகொண்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் பாலகிருஷ்ணன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பாலகிருஷ்ணன் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், ராஜலட்சுமி கடலூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story