கல்லூரி மாணவி மாயம்


கல்லூரி மாணவி மாயம்
x

கல்லூரி மாணவி மாயமானார்.

அரியலூர்

விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள உல்லியக்குடி தெற்குத்தெருவை சேர்ந்தவர் கலையரசன். இவரது மகள் விஜிபிரியா(வயது 19). இவர் தத்தனூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.லிட் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று கல்லூரி பஸ்சில் கல்லூரிக்கு சென்ற விஜிபிரியா, பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து கலையரசன் விக்கிரமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் வழக்குப்பதிவு செய்து விஜிபிரியாவை தேடி வருகிறார்.


Next Story