காதலனோடு சேர்த்து வைக்காததால் விரக்தி; கல்லூரி மாணவி தற்கொலை
வடமதுரை அருகே காதலனோடு சேர்த்து வைக்காததால் விரக்தியடைந்த கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வடமதுரை அருகே காதலனோடு சேர்த்து வைக்காததால் விரக்தியடைந்த கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கல்லூரி மாணவி
திண்டுக்கல் மாவட்டம் செங்குறிச்சி அருகே உள்ள கம்பிளியம்பட்டி இந்திராநகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் ஜனனி (வயது 17). இவர் திண்டுக்கல் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த 19-ந்தேதி ஜனனி திடீரென்று வீட்டில் இருந்து மாயமானார். இதனால் அவரை பெற்றோர், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் செல்வராஜ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் ஜனனி, வடமதுரை போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அப்போது அவரிடம் போலீசார் விசாரித்தனர். அதில், செல்போன் பயன்படுத்தியதை பெற்றோர் கண்டித்ததால் கோபித்துக்கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்றதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார், ஜனனியின் பெற்றோரை வரவழைத்து அவர்களுடன் மாணவியை அனுப்பி வைத்தனர்.
தூக்குப்போட்டு தற்கொலை
இதற்கிடையே வீட்டிற்கு சென்றவுடன் ஜனனியிடம் பெற்றோர் விசாரித்தபோது, அவர் அதே பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபரை காதலித்து வந்ததாகவும், அவருடன் சென்றதாகவும் தெரிவித்தார். மேலும் அந்த வாலிபருடன் திருமணம் செய்து வைக்குமாறு ஜனனி கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெற்றோர் அவரை கண்டித்ததுடன், உரிய வயது எட்டியவுடன் திருமணம் செய்து வைப்பதாக கூறினர். பின்னர் அவரை சமரசம் செய்துவிட்டு, பெற்றோர் தூங்கிவிட்டனர்.
இதற்கிடையே நள்ளிரவில் அனைவரும் தூங்கிய பிறகு வீட்டில் ஜனனி துப்பட்டாவால் தூக்குப்போட்டார். அப்போது திடுக்கிட்டு எழுந்த ஜனனியின் பெற்றோர், அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஜனனி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.