ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி வழங்ககோரி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் திடீர் தர்ணா


ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி வழங்ககோரி  கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் திடீர் தர்ணா
x

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி வழங்ககோரி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் திடீர் தர்ணா

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த கீழ்குப்பத்தை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி வழங்காததை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கீழ்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள 35 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்குவதில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த ஒரு மாதத்துக்கு முன் மாவட்டம் முழுவதிலிருந்தும் வந்த 158 பேர் கலெக்டர் அலுவலகம் வந்து மனு அளித்தோம். காவேரிப்பட்டணம், வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டும், எங்கள் கோரிக்கைகள் ஏற்கபடவில்லை என்றனர். தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம் மாற்றுத்திறனாளிகள் அலுவலக முடநீக்கு வல்லுனர் பிரகாஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். வட்டார வாரியாக மாற்றுத்திறனாளிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் 100 நாட்கள் வேலை வழங்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story