கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில்கோடை சிறப்பு முகாம் நிறைவு விழாகலெக்டர் சரயு பங்கேற்பு


கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில்கோடை சிறப்பு முகாம் நிறைவு விழாகலெக்டர் சரயு பங்கேற்பு
x
தினத்தந்தி 28 May 2023 7:00 PM GMT (Updated: 28 May 2023 7:00 PM GMT)
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் கோடை மகிழ்ச்சி கொண்டாட்ட சிறப்பு முகாம் நிறைவு விழா நடந்தது.

கோடை விழா

கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கான கோடை மகிழ்ச்சி கொண்டாட்டம் சிறப்பு முகாம் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. முகாமின் நிறைவு விழா கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை நீர்வளத்துறை விருந்தினர் மாளிகை வளாகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் சரயு கலந்து கொண்டு ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களை பாராட்டி கேடயங்களை வழங்கி, வாழ்த்துக்களை தெரிவித்து, மாணவர்களுக்கு தேனீர் விருந்தளித்தார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் பேசுகையில் மாவட்டம் முழுவமும் இருந்து 8, 9-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் அவர்களுக்கு விளையாட்டு, கலை, கைவினை, இசை, நடனம் மற்றும் நாடகம் போன்ற பல்வேறு செயல்பாடுகளில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றனர். சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற முக்கியமான தலைப்புகளை மையமாக கொண்ட கல்வி பட்டறைகளில் பங்கேற்று தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொண்டனர். இந்த கோடைகால முகாம் மாணவர்களுக்கு நேர்மறையான மற்றும் ஈர்க்கக்கூடிய கற்றல் அனுபவத்தை வழங்கியதுடன், அவர்களின் திறன்கள் மேம்படுத்துவதையும், புதிய நட்புக்களை பெற்றுள்ளன என்று பேசினார்.

மாணவர்களிடம் கலந்துரையாடல்

முன்னதாக கலெக்டர், உதவி கலெக்டர் மற்றும் அதிகாரிகள் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினர். முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் தாங்கள் பார்வையிட்ட நிகழ்வுகள் குறித்து எடுத்துரைத்தனர். தொடர்ந்து நெடுமருதி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்ற கைகளை இழந்த மாணவர் கீர்த்தி வர்மா மற்றும் கண்பார்வை இழந்த ஓசூர் நல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி ரியாஸ்ரீ ஆகியோரை கலெக்டர் பாராட்டி, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் மாணவ, மாணவிகளுக்கு மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வை தொடங்கி வைத்து மஞ்சப்பைகளை வழங்கினார். இதில் ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா, ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, மாவட்ட கல்வி அலுவலர் மணிகேமலை, தனி தாசில்தார் விஜயகுமார், கிருஷ்ணகிரி தாசில்தார் சம்பத், கல்வித்துறை அலுவலர்கள் வெங்கடேசன், அப்துல்சர்தார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story