நாமக்கல்லில் கைத்தறி ஜவுளி கண்காட்சி: நெசவாளர்களுக்கு ரூ.4 லட்சம் கடன் உதவி கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார்

நாமக்கல்லில் கைத்தறி ஜவுளி கண்காட்சி:  நெசவாளர்களுக்கு ரூ.4 லட்சம் கடன் உதவி  கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார்
x

நாமக்கல்லில் நடந்த கைத்தறி ஜவுளி கண்காட்சியில் நெவாளர்களுக்கு ரூ.4 லட்சம் கடன் உதவிகளை கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார்.

நாமக்கல்

நாமக்கல்லில் நடந்த கைத்தறி ஜவுளி கண்காட்சியில் நெவாளர்களுக்கு ரூ.4 லட்சம் கடன் உதவிகளை கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார்.

கைத்தறி ஜவுளி கண்காட்சி

தேசிய கைத்தறி தினத்தை சிறப்பிக்கும் வகையில் நேற்று நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் கைத்தறி ஜவுளிகளின் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்றது. இந்த கண்காட்சியை கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்து நெசவாளர் முத்ரா கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் 8 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.4 லட்சம் கடன் தொகையை வழங்கினார்.

கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க பணியாளர்கள் 14 பேருக்கு அரசு அறிவித்த 5-வது ஊதிய குழு சம்பள உயர்வுக்கான ஆணையை வழங்கினார்.

காட்டன் சேலைகள்

கண்காட்சியில் 30 அரங்குகள் அமைக்கப்பட்டு திருச்செங்கோடு சரகத்திற்குட்பட்ட 40-க்கும் மேற்பட்ட முன்னணி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் கைத்தறியில் உற்பத்தி செய்யப்பட்ட ரகங்களான துண்டு ரகங்கள், வேட்டிகள், காட்டன் சேலைகள், ஜமுக்காளம், அகர்லி சால்வைகள் மற்றும் பட்டு சேலைகள் ஆகியவை 20 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டது. இதில் திருச்செங்கோடு சரக கைத்தறி உதவி இயக்குனர் செந்தில் குமார், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story