நாமக்கல்லில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடந்தது

நாமக்கல்லில்  விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்  கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடந்தது
x

நாமக்கல்லில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடந்தது

நாமக்கல்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். பருத்தியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கு அரசே விலை நிர்ணயம் செய்ய வேண்டும். ஆவினில் 4 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பால் விலையை உயர்த்தி தர வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் விவசாயிகள் தரப்பில் வைக்கப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசன், வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) ராஜகோபால், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வகுமாரன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் (பொறுப்பு) நடராசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story