வலங்கைமான் பேரூராட்சி சார்பில் தூய்ைம பணிகள்


வலங்கைமான் பேரூராட்சி சார்பில் தூய்ைம பணிகள்
x

வலங்கைமான் பேரூராட்சி சார்பில் தூய்ைம பணிகள்

திருவாரூர்

வலங்கைமான் மகா மாரியம்மன் கோவில் பாடைக்காவடி திருவிழா வருகிற 27-ந்தேதி நடக்கிறது. விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பேரூராட்சியின் சார்பில் வலங்கைமான் சுற்றுப்புற பகுதிகளில் பக்தர்கள் வந்து செல்லும் சாலைகளில் குடிநீர் வசதி ஏற்படுத்துதல், கழிவறை வசதிகள், கழிவுநீர் பாதைகளை சீரமைத்தல், குப்பை கழிவுகள் அகற்றப்பட்டு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து வலங்கைமான் பேரூராட்சி செயல் அலுவலர் பரமேஸ்வரி கூறுகையில், வலங்கைமான் மகா மாரியம்மன் கோவில் பாடைக்காவடி திருவிழாவில் பக்தர்களுக்கு எந்தவிதமான குறைபாடும் இல்லாமல் அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்றும் வகையில் பணிகளை செய்து வருகிறோம். மேலும் தேவையான அனைத்து பணிகளையும் நிறைவேற்ற பேரூராட்சி நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்றார்். இதில் பேரூராட்சி தலைவர் சர்மிளா சிவனேசன், துணைத்தலைவர் தனித்தமிழ் மாறன் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story