சி.ஐ.டி.யு. ஆர்ப்பாட்டம்


சி.ஐ.டி.யு.  ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Feb 2023 6:45 PM GMT (Updated: 9 Feb 2023 6:46 PM GMT)

தென்காசியில் சி.ஐ.டி.யு. ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி

சி.ஐ.டி.யு தென்காசி மாவட்ட குழு சார்பில் தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுத்துறை, தனியார் ஆலைகளில் உற்பத்தி பகுதிகளில் காண்ட்ராக்ட் முறையை கைவிட வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.26,000 உறுதி செய்ய வேண்டும். காண்ட்ராக்ட் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் அயூப் கான் தலைமை தாங்கினார். போக்குவரத்து தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் கருப்பசாமி, அமல்ராஜ், மின் ஊழியர் மத்திய அமைப்பு நிர்வாகி பச்சையப்பன், அங்கன்வாடி சரஸ்வதி, உள்ளாட்சித் துறை மகாலிங்கம், பீடி தொழிலாளர்கள் சங்கம் தர்மகனி, டாஸ்மாக் ஊழியர் சங்கம் ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மணிகண்டன் ெதாடக்க உரையாற்றினார். மாவட்ட பொருளாளர் தர்மராஜ், துணைத்தலைவர் வன்னிய பெருமாள், இணை செயலாளர் மகாவிஷ்ணு உட்பட பலர் பேசினார்கள். மாநில உதவி தலைவர் மகாலட்சுமி நிறைவுரையாற்றினார்.


Next Story