கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை


கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை
x

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

கிறிஸ்துமஸ் விழா

இயேசு கிறிஸ்து பிறந்த நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கடந்த ஒரு வார காலமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. ஆலயங்கள் மற்றும் ஆலய வளாகம் முழுவதும் வண்ண, வண்ண மின் விளக்குகள் பொருத்தப்பட்டு இரவு மின்னொளியில் ஜொலித்து வருகின்றன.

நேற்று நள்ளிரவு கத்தோலிக்க ஆலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள சவேரியார் பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் ஆராதனையில் பாளையங்கோட்டை மறைமாவட்ட கத்தோலிக்க பிஷப் அந்தோணி சாமி கலந்துகொண்டு கிறிஸ்துமஸ் நற்செய்தி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பேராலய பங்கு தந்தை சந்தியாகு, உதவி பங்கு தந்தையர்கள் செல்வின், இனிகோ, ஆயரின் செயலர் மைக்கேல் பிரகாசம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை, தென்காசி

இதேபோல் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும் நேற்று நள்ளிரவு கிறிஸ்துமஸ் பிரார்த்தனை நடைபெற்றது.

11.59 மணிக்கு மின் விளக்குகள் அணைக்கப்பட்டு, இயேசு கிறிஸ்து பிறப்பது போன்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. விண்ணிலிருந்து நட்சத்திரம் கீழே இறங்கி வருவது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து பங்கு தந்தையர் குழந்தை இயேசுவின் உருவத்தை ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிலில் வைத்தனர். அதனை இறைமக்கள் வரிசையாக நின்று வணங்கினார்கள். பின்னர் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

சி.எஸ்.ஐ.ஆலயங்கள்

இதுதவிர சி.எஸ்.ஐ ஆலயங்களில் இன்று அதிகாலை கிறிஸ்துமஸ் ஆராதனை நடைபெற்றது.

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி நடந்த சிறப்பு பிரார்த்தனையில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story