குமரியில் மழை:சிற்றார் 1-ல் 20 மில்லி மீட்டர் பதிவு


குமரியில் மழை:சிற்றார் 1-ல் 20 மில்லி மீட்டர் பதிவு
x
தினத்தந்தி 26 March 2023 12:15 AM IST (Updated: 26 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குமரியில் மழை பெய்ததால் சிற்றார் 1-ல் 20 மில்லி மீட்டர் பதிவானது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் காலையில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், மாலையில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது.

அதிலும் குறிப்பாக மாவட்டத்தில் உள்ள மலையோரம் மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்கிறது. நேற்று முன்தினம் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் ஆகிய அனைப்பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது.

இதனால் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சிற்றார்-1 அணைப்பகுதியில் 20 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மற்ற பகுதிகளில் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

பேச்சிப்பாறை- 17.2, பெருஞ்சாணி- 6.6, சிற்றார் 2- 7.4, சுருளோடு- 2.6, பாலமோர்- 5.2, கன்னிமார்- 2.2, முக்கடல்- 6.3, புத்தன் அணை- 6 என பதிவாகி இருந்தது. மழை பெய்ததால் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 420 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 223 கன அடி தண்ணீர் குடிநீருக்காக திறந்து விடப்பட்டு உள்ளது. இதே போல் பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 111 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

--


Next Story