குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றம் என்று திருவாரூர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.

குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றம் என்று திருவாரூர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.
x

குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றம் என்று திருவாரூர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.

திருவாரூர்

திருவாரூர்;

குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றம் என்று திருவாரூர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.

குழந்தை தொழிலாளர் சட்டம்

திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கலந்து கொண்டு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து கையெழுத்து இயக்கத்தில் முதல் கையெழுத்திட்டு, கலைக்குழு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பஸ்களில் ஸ்டிக்கர்களை ஒட்டினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

குழந்தை தொழிலாளர் சட்டம், குழந்தை மற்றும் வளர் இளம் பருவ தொழிலாளர்கள் சட்டம் என திருத்தம் செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சட்டத்தில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எவ்வித பணியிலும் ஈடுபடுத்துவதும், 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட வளர் இளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

சிறை தண்டனை

இந்த சட்ட விதிகளை மீறுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 2-ம் சேர்ந்து விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இரண்டாம் முறையாக இச்சட்டவிதிகளை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட குழந்தை தொழிலாளர்களின் பெற்றோருக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவரும் கட்டாயம் கல்வி கற்க வேண்டும்.

சட்டப்படி குற்றம்

குழந்தை தொழிலாளர் குறித்த தகவல்களை சைல்டு லைன் தொலைபேசி எண்:1098 என்ற எண்ணிற்கு உடனடியாக தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். குழந்தைகளை தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்துவது சட்டபடி குற்றம்.இவ்வாறு கலெக்டர் கூறினார். நிகழ்ச்சியில் திருவாரூர் நகரசபை தலைவர் புவனபிரியா செந்தில், துணைத்தலைவர் அகிலா சந்திரசேகர், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ப.பாஸ்கரன், நகராட்சி ஆணையர் பிரபாகரன், நகர்மன்ற உறுப்பினர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story