கரூரில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


கரூரில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

கரூரில் 80 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கரூர்:

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அந்தவகையில் முதல்-அமைச்சராக பதவியேற்ற பின் அவர் முதன்முறையாக கரூர் மாவட்டத்திற்கு நேற்று வருகை புரிந்துள்ளார்.

இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் கரூர் பயணியர் மாளிகையில் இருந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும் திருமாநிலையூர் மைதானத்திற்கு வந்தார்.

பின்னர் விழா மேடையில் 80 ஆயிரத்து 555 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, கரூர் மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கியும் வைத்தார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் வழியில் 23 இடங்களில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் வழிநெடுகிலும் நின்று பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். முதல்-அமைச்சர் வருகையையொட்டி போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story