மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னை,

சென்னையில் கடந்த ஆண்டு பருவமழையின் போது சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக முதல்-அமைச்சர் உத்தரவின்படி, சென்னையில் மழைநீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். போரூர், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்-அமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது வடிகால் பணிகள் குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 120 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில், தந்திக்கால் வாய்க்கால், போரூர் உபரிநீர் கால்வாய் மற்றும் வரதராஜபுரம், ராயப்பா நகரின் வெளிவட்ட சாலை ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.


Next Story