முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் உண்மையான விவசாயி: அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேச்சு


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் உண்மையான விவசாயி: அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேச்சு
x

இலவச மின் இணைப்பை வழங்கியே தீர்வேன் என கூறிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் உண்மையான விவசாயி என அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறினார்.

கரூர்

கடுமையான நிதி நெருக்கடி

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே தடாகோவிலில் நேற்று காலை நடந்த விழாவில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேசியதாவது:- விவசாயிகள் ஏறத்தாழ 20 ஆண்டுகள் மின் இணைப்பு பெற பதிவு செய்து காத்திருந்தனர். கடந்தாண்டு 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, இந்தாண்டு 50 ஆயிரம் விவசாயிகள் என 2 ஆண்டுகளில் 1½ லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. நான் ஒரு விவசாயி என வார்த்தையில் சொன்னால் போதாது. 4½ லட்சம் விவசாயிகள் இலவச மின்சாரத்திற்கு பதிவு செய்து காத்திருந்தனர்.

கடந்த காலங்களில் மின்மிகை மாநிலம் என்று கூறிக்கொண்டார்கள். ஆனால் மின்மிகை மாநிலம் என்றால் 4½ லட்சம் விவசாயிகள் ஏன் பதிவு செய்து காத்திருக்க கூடிய சூழல் ஏற்பட்டது. கடுமையான நிதி நெருக்கடியிலும், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சூழல் மிக மோசமாக இருந்த நிலையிலும் கூட தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றியை தீர்வேன், பதிவு செய்து காத்திருக்க கூடிய அனைத்து விவசாயிகளுக்கும் படிப்படியாக இலவச மின் இணைப்பை வழங்கியே தீர்வேன் என கூறிய நமது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் உண்மையான விவசாயி. விவசாயி என்பது வெறும் வார்த்தை இல்லை. செயலில் இருக்க வேண்டும்.

65 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு...

32 ஆயிரம் மெகா வாட் இருக்க கூடிய தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிறுவு திறனில் ஏறத்தாழ 25 சதவீதத்திற்கும் குறைவாகத்தான் 7 ஆயிரம் மெகா வாட் அளவிற்கு தான் சொந்த உற்பத்தி இருந்தது. இதனை ஆய்வு செய்த முதல்-அமைச்சர் அடுத்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உற்பத்தி என்பது 32 ஆயிரம் மெகாவாட்டில் இருந்து 65 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு உற்பத்தி செய்ய வேண்டும். அதில் 50 சதவீதம் மின்சார வாரியத்தின் சொந்த உற்பத்தியாக இருக்க வேண்டும் என உத்தரவுகளை வழங்கி இருக்கிறார்.

உற்பத்தியை வினியோகிப்பதற்காக கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு புதிய துணைமின் நிலையங்கள் தொடங்கி மின்மாற்றிகள் வரை பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கு உத்தரவு வழங்கி உள்ளார். அடுத்த 5 ஆண்டுகளுக்குள் தமிழ்நாடு மின்சார வாரியம் இந்தியாவில் முதல் இடத்தை பெறும் என்ற உறுதியை தெரிவித்துகொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் துணை மேயர் தாரணி சரவணன், கரூர் மாநகர செயலாளர்கள் எஸ்.பி. கனகராஜ், கரூர் கணேசன், சுப்பிரமணியன், அன்பரசன், கோல்டு ஸ்பாட் ராஜா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சக்திவேல், மாநில நெசவாளர் அணி செயலாளர் பரணி கே.மணி, புகழூர் நகர செயலாளர் சேகர் என்கிற குணசேகரன், புகழூர் நகராட்சி துணைத் தலைவர் பிரதாபன், அரவக்குறிச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.மணியன், அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், க.பரமத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக், கரூர் மாவட்ட தி.மு.க. தொண்டரணி அமைப்பாளர் ஜிம் சிவா, குளித்தலை நகர் மன்ற தலைவர் சகுந்தலா பல்லவி ராஜா, பல்லவி ராஜா, அரவக்குறிச்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் வள்ளியாத்தாள் குருசாமி, வெங்கமேடு மலையம்மன் அருள்முருகன், புலியூர் செயலாளர் அம்மையப்பன், பழைய ஜெயங்கொண்டம் செயலாளர் மோகன்ராஜ், கிருஷ்ணராயபுரம் செயலாளர் சசிகுமார், உப்பிடமங்கலம் செயலாளர் தங்கராஜ், கூடலூர் ஒன்றிய கவுன்சிலர் சுகந்தி சசிகுமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் அலமேலு மனோகர், தேன்மொழி தியாகராஜன், நந்தினிதேவி தமிழ்ச்செல்வன், கண்ணையன், நல்லமுத்து வடிவேல், ஆலமரத்துப்பட்டி ஊராட்சி தலைவர் தண்டபாணி, புங்கம்பாடி (கிழக்கு) ஊராட்சி தலைவர் மாரியப்பன், வேலம்பாடி ஊராட்சி தலைவர் ராணி கணேசன், வேட்டமங்கலம் ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன், புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி தலைவர் ரூபா, தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story