செஸ் ஒலிம்பியாட் போட்டி: தர்மபுரி மாவட்டம் முழுவதும் 225 அரசு பள்ளிகளில் செஸ் போட்டிகள்


செஸ் ஒலிம்பியாட் போட்டி: தர்மபுரி மாவட்டம் முழுவதும் 225 அரசு பள்ளிகளில் செஸ் போட்டிகள்
x

தர்மபுரி மாவட்டம் முழுவதும் அரசு பள்ளிகளில் நடைபெற்ற செஸ் போட்டிகளில் 5000 மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

தர்மபுரி,

சென்னை மாமல்லபுரத்தில் வருகிற 28-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை 44-வது செஸ் ஒலிம்பியாட்- 2022 போட்டிகள் நடைபெறுகிறது. இந்த போட்டிகள் குறித்து தர்மபுரி மாவட்டத்தில் பொது மக்களுக்கு விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு துறைகளில் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தர்மபுரி மாவட்ட விளையாட்டு பிரிவு மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான செஸ் போட்டிகள் நடைபெற்றது.

தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் நடைபெற்ற செஸ் போட்டிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு செஸ் போட்டிகள் நடைபெற்றது.

மாவட்டம் முழுவதும் நடைபெற்ற இந்த போட்டிகளில் 225 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 5000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.


Next Story