அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு செஸ் போட்டி


அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு செஸ் போட்டி
x

அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு செஸ் போட்டி நடந்தது.

அரியலூர்

சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டி குறித்து அரியலூர் மாவட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தம் வகையில் அனைத்து அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி, வட்டார, மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. அதனடிப்படையில், தற்போது அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், திருமானூர், ஜெயங்கொண்டம், தா.பழூர், செந்துறை, ஆண்டிமடம் ஆகிய 6 வட்டாரங்களில் உள்ள சுமார் 300 அரசு பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி அளவில் செஸ் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த போட்டியில் ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் முதல் 2 இடங்களை பிடித்தவர்களுக்கு வட்டார அளவிலான போட்டி நாளை (புதன்கிழமை) நடத்தப்பட உள்ளது. வட்டார அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு வருகிற 25-ந்தேதி அஸ்தினாபுரம் மாதிரி பள்ளியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடத்தப்பட உள்ளது.


Next Story