செஸ் போட்டி விழிப்புணர்வு


செஸ் போட்டி விழிப்புணர்வு
x

உலக அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெறுவதையொட்டி ராமநாதபுரம் பஸ் மற்றும் ரெயில் நிலையங்களில் கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

ராமநாதபுரம்


உலக அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெறுவதையொட்டி ராமநாதபுரம் பஸ் மற்றும் ரெயில் நிலையங்களில் கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

விழிப்புணர்வு

உலக அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெறுவதையொட்டி ராமநாதபுரம் ரெயில் நிலயத்தில் நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவி களுக்கான செஸ் போட்டிகளில் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் கலந்துகொண்டு மாணவர்களுடன் செஸ் விளையாடினார். மேலும் ராமநாதபுரம் நகராட்சி பஸ் நிலையத்தில் பஸ்களில் செஸ் போட்டி ஸ்டிக்கர்களை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அப்போது கலெக்டர் கூறியதாவது:- ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி முதல் சென்னை மாமல்லபுரத்தில் நடை பெறக்கூடிய 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி உலக அளவில் முக்கியமான விழா ஆகும். தமிழ்நாட்டில் முதல் முறையாக நடைபெறுகிறது.

ஜோதி

அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வருகிற 26-ந்தேதி மதுரையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு செஸ் ஒலிம்பியாட் ஜோதி வர உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய இடங்களுக்கும் இந்த ஜோதி கொண்டு செல்லப்பட்டு மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

அதன் முன்னோடியாக ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து பொதுஇடங்களில் எங்கெல்லாம் மக்கள் அதிகம் கூடுகின்றனரோ அங்கெல்லாம் செஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

ஜாம்பவான்கள்

அனைத்து மக்களும் இந்த செஸ் ஒலிம்பியாட்டை வரவேற்க வேண்டும். செஸ் விளையாட்டு பற்றி அறிந்துகொள்ள வேண்டும். உலக அளவில் பல்வேறு செஸ் ஜாம்பவான்கள் நம் தமிழ்நாட்டில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கின்றனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைக்க உள்ளார். போட்டிகளுக்கு பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.


Related Tags :
Next Story