சென்னை புறநகர் மின்சார ரெயில்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இயக்கம்: தெற்கு ரெயில்வே


சென்னை புறநகர் மின்சார ரெயில்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இயக்கம்: தெற்கு ரெயில்வே
x
தினத்தந்தி 4 Dec 2023 3:25 AM GMT (Updated: 4 Dec 2023 3:29 AM GMT)

சேத விவரங்களை அறிந்த பின்னர் மின்சார ரெயிலை மீண்டும் இயக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று ரெயில்வே தெரிவித்து இருந்தது.

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் நேற்று மாலை முதல் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கிண்டி, வேளச்சேரி, பரங்கிமலை, எழும்பூர், மாம்பலம், மடிப்பாக்கம், பெரம்பூர், அண்ணாநகர், ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், அரும்பாக்கம், தாம்பரம், நுங்கம்பாக்கம் உள்பட நகரின் பல பகுதிகளில் நள்ளிரவு முதல் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில், புயல், கனமழை காரணமாக சென்னை புறநகர் மின்சார ரெயில்கள் அனைத்தும் காலை 8 மணி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சேத விவரங்களை அறிந்த பின்னர் மின்சார ரெயிலை மீண்டும் இயக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் ரெயில்வே தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், சென்னை புறநகர் மின்சார ரெயில்கள் ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை சிறப்பு ரெயில்களாக இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. ரெயில்கள் செல்லும் பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால், பொறுமையாக ரெயில்களை இயக்குமாறு லோகோ பைலட்டுகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.


Next Story