செங்கல்பட்டு: தேசிய நெடுஞ்சாலையில் எரிவாயு ஏற்றிச் சென்ற டேங்கர் லாரியில் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு


செங்கல்பட்டு: தேசிய நெடுஞ்சாலையில் எரிவாயு ஏற்றிச் சென்ற டேங்கர் லாரியில் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு
x

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது டேங்கர் லாரியில் இருந்து எரிவாயு கசிவு ஏற்பட்டது.

செங்கல்பட்டு,

சென்னை எண்ணூரில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்திற்குச் சொந்தமான குடோனில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு மதுரையை நோக்கி ஒரு டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. மதுரையைச் சேர்ந்த அசாருதீன் என்பவர் அந்த லாரியை ஓட்டிச் சென்றார்.

இந்த டேங்கர் லாரியானது செங்கல்பட்டு அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக டேங்கர் லாரியில் இருந்து எரிவாயு கசிவு ஏற்பட்டது.

இதையடுத்து உடனடியாக லாரியை நிறுத்திய ஓட்டுநர் அசாருதீன், இது குறித்து தீயணைப்புத்துறைக்கும், இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கும் தகவல் தெரிவித்தார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், எரிவாயு கசிவால் தீவிபத்து ஏற்படுவதை தடுப்பதற்காக டேங்கர் லாரி மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து வேறு லாரி வரவழைக்கப்பட்டு எரிவாயு சிலிண்டர்களை மாற்றும் பணி நடைபெற்றது.




Next Story