வாலிபரிடம் மோசடி; ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மீட்பு


வாலிபரிடம் மோசடி; ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மீட்பு
x

ஆன்லைன் மூலம் தொழில் செய்யலாம் என கூறி வாலிபரிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை போலீசார் மீட்டனர்

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அகஸ்தியன்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கவிதரன். இவருக்கு, வாட்ஸ் அப் மூலம் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த நபர் ஆன்லைன் மூலம் தொழில் செய்தால் அதிக லாபம் பெறலாம் என தெரிவித்துள்ளார். இதை நம்பிய கவிதரன், அந்த நபர் கூறிய வங்கி கணக்குக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை அனுப்பி வைத்துள்ளார். பின்னர் அந்த நபரை தொடர்பு கொண்ட போது அவரது செல்போன் சுவீட் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்து அவர், நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹரிடம் புகார் கொடுத்தார்.. அதன் பேரில் சைபர் கிரைம் உதவி போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு விசாரணை நடத்தி பணத்தை மோசடி செய்த நபரின் வங்கி கணக்கை முடக்கி ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை மீட்டனர். இந்த பணத்தை கவிதரனிடம், போலீஸ் சூப்பிரண்டு ஒப்படைத்தார்.


Related Tags :
Next Story