மேல்மருவத்தூர்-விழுப்புரம் இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம்


மேல்மருவத்தூர்-விழுப்புரம் இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
x

மேல்மருவத்தூர்-விழுப்புரம் இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம் -தெற்கு ரெயில்வே அறிவிப்பு.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்கண்ட மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* மேல்மருவத்தூர்-விழுப்புரம் (வண்டி எண்: 06725) இடையே காலை 11.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இன்று (வியாழக்கிழமை) மற்றும் 19, 22, 26-ந்தேதிகளில் விக்கிரவாண்டி-விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் விக்கிரவாண்டி வரை மட்டுமே இயக்கப்படும்.

*விழுப்புரம்-மேல்மருவத்தூர் (06726) இடையே மதியம் 1.45 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இன்று மற்றும் வருகிற 19, 22, 26-ந்தேதிகளில் விழுப்புரம் - விக்கிரவாண்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் விக்கிரவாண்டியில் இருந்து இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story