சென்டிரல்-அரக்கோணம், திருத்தணி இடையே மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம்


சென்டிரல்-அரக்கோணம், திருத்தணி இடையே மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம்
x

சென்டிரல்-அரக்கோணம், திருத்தணி இடையே மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

* சென்னை சென்டிரல்-அரக்கோணம் இடையே காலை 11 மணிக்கும், அரக்கோணம்-சென்டிரல் இடையே மதியம் 12 மணிக்கும், சென்டிரல்-திருத்தணி இடையே காலை 11.45 மணிக்கும், திருத்தணி-சென்டிரல் இடையே மதியம் 12.35 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில்கள் இன்று (திங்கட்கிழமை), நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் 29-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

* இந்த ரெயில்களுக்கு பதிலாக சென்டிரல்-கடம்பத்தூர் இடையே காலை 11 மணி மற்றும் 11.45 மணிக்கும், கடம்பத்தூர்-சென்டிரல் இடையே மதியம் 12.25 மணி மற்றும் 1.25 மணிக்கும் பயணிகள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.


Next Story