திருத்தணி முருகன் கோவிலில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் சாமி தரிசனம்


திருத்தணி முருகன் கோவிலில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் சாமி தரிசனம்
x

திருத்தணி முருகன் கோவிலில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார்.

திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் நேற்று கிருத்திகை முருகனுக்கு விசேஷ தினம் என்பதால் அண்டை மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் காவடி எடுத்து, அலகு குத்தி வந்து சாமி தரிசனம் செய்தனர். இதனால், பொதுவழியில், பக்தர்கள் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.

இந்த நிலையில் மத்திய தகவல் தொடர்பு இணை மந்திரி எல்.முருகன் நேற்று திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு வந்தார். பின்னர் கொடி மரத்தை வணங்கி உள்ளே சென்று மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.


Next Story