பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு:அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு:அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
x
தினத்தந்தி 29 March 2023 6:45 PM GMT (Updated: 29 March 2023 6:46 PM GMT)

பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யபட்டதை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்

ராமநாதபுரம்

சாயல்குடி,

எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை அ.தி.மு.க.வினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். கடலாடியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கடலாடி ஒன்றிய தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர்கள் குமரையா, ஜெயச்சந்திரன், ராஜேந்திரன், சேதுபாண்டியன், ஞானம்மாள் மோகன், ராமலட்சுமி, ஊராட்சி தலைவர்கள் கடுகுசந்தை காளிமுத்து, கடலாடி ராஜமாணிக்கம் லிங்கம், மேலச்செல்வனூர் மகரஜோதி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலாடி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் முனியசாமி பாண்டியன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் விவசாய அணி தலைவர் சண்முக போஸ், கடலாடி ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் ராமர், மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம், ஆப்பனூர் செந்தூர்பாண்டியன், நகர செயலாளர் முருகேஷ் பாண்டியன், கிளைச் செயலாளர் கிழவன், அங்குசாமி, மாரிமுத்து வில்வத்துரை, சண்முகராஜா, வீராசாமி, லிங்கம், பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். சாயல்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சாயல்குடி ஒன்றிய செயலாளர் அந்தோணி ராஜ், பேரூர் கழகச் செயலாளர் ஜெயபாண்டியன் ஆகியோர் தலைமையிலும், கவுன்சிலர் நவஜோதி பிரவீன்குமார், மாவட்ட பிரதிநிதி அமிர்தபாண்டியன், ஒன்றிய துணைச் செயலாளர் பால்பாண்டியன், அவைத் தலைவர் பெரியசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் செய்யது காதர், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சந்திரன், எம்.ஜி.ஆர். மன்ற அய்யம்பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பட்டாசுகளை வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகளை சாயல்குடி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அந்தோணி ராஜ் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பனைவெல்ல கூட்டுறவு சங்க தலைவர் சேகர், தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் அதிபன் சக்கரவர்த்தி, நிர்வாகிகள் அய்யம்பாண்டி, ராஜகோபால், மாரியப்பன், வார்டு செயலாளர்கள் முத்துராஜ், மதியழகன், அசோக் சவுந்தர்ராஜன், ராமநாதன், ஜோசப் அந்தோணி தாசன், செல்லத்துரை, நகர் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முத்துப்பாண்டியன், வர்த்தக அணி செயலாளர் செல்வவேல், நகர் பாசறை செயலாளர் சண்முகராஜ் மாணவர் அணி செயலாளர் சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.


Next Story