சுற்றுலா பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


சுற்றுலா பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
x
தினத்தந்தி 15 July 2023 9:30 PM GMT (Updated: 15 July 2023 9:30 PM GMT)

சுற்றுலா பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

நீலகிரி

குன்னூர்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு அழகிய மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பயணம் செய்து, இயற்கை எழில் காட்சிகளை ரசித்து வருகின்றனர்.

இ்ந்த நிலையில் யுனெஸ்கோ அமைப்பு கடந்த 2005-ம் ஆண்டு ஊட்டி மலைரெயிலை பாரம்பரிய சின்னமாக அங்கீகரித்தது. இந்த அறிவிப்பு வெளியாகி நேற்றுடன் 18 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதையொட்டி குன்னூர் ரெயில் நிலையத்தில் மலைரெயிலுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் மலைரெயிலில் வந்த சுற்றுலா பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. மேலும் மலைரெயிலின் சிறப்புகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. அப்போது தோடர் இன பெண் மலைெரயில் குறித்து பாட்டு பாடியது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.


Next Story