அம்மன் கோவில்களில் செடல் திருவிழா


அம்மன் கோவில்களில் செடல் திருவிழா
x

விருத்தாசலம் பகுதி அம்மன் கோவில்களில் செடல் திருவிழா நடைபெற்றது.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த செம்பளாக்குறிச்சி கிராமத்தில் கருமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் செடல் திருவிழா கடந்த 19-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவில் செடல் உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி காலையில் விருத்தாசலம் மணிமுக்தாற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்து வரப்பட்டது. அப்போது விரதம் இருந்த பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து செடல் உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோபாலபுரம் மாரியம்மன்

கம்மாபுரம் அடுத்த கோபாலபுரம் மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா கடந்த 7-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடா்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வந்தது.

விழாவையொட்டிபக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து கோவிலுக்கு நோ்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பக்தர்கள் செடல் போட்டுக்கொண்டனர். பின்னர் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story