காவனூர் இந்திரா நர்சரி, பள்ளியில் அறிவியல் கண்காட்சி


காவனூர் இந்திரா நர்சரி, பள்ளியில் அறிவியல் கண்காட்சி
x

காவனூர் இந்திரா நர்சரி, பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

ராணிப்பேட்டை

திமிரியை அடுத்த காவனூரில் உள்ள இந்திரா நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளியில் 37-வது ஆண்டு அறிவியல் கண்காட்சி 2 நாட்கள் நடைபெற்றது. பள்ளி நிர்வாகி ஆர்.சேட்டு, எஸ்.லட்சுமி சேட்டு ஆகியோர் தலைமை தாங்கினர். ஊராட்சி மன்ற தலைவர்கள் காவனூர் ஆர்.ரஞ்சித்குமார், சாம்பசிவபுரம் ஜி.சம்பத், புங்கனூர ஜெ.அம்பேத்கர், குப்பம் சி.காமராஜ் (குப்பம்), வரகூர் பட்டணம் சுகன்யா தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் எம்.கோபி வரவேற்றார். ஆற்காடு மகாத்மா காந்தி முதியோர் அறக்கட்டளை தலைவர் டாக்டர் ஜெ.லட்சுமணன் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

அப்போது இப்பள்ளியில் தாய், தந்தை இல்லாத குழந்தைகளை இலவசமாக படிக்க வைக்கிறார்கள். தமிழ், ஆங்கிலத்தில் அறிவியல் செயல்முறை விளக்கத்தை மாணவர்கள் சிறப்பாக அளித்தார்கள். சிறப்பான மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்களுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் பாராட்டுகள் என்றார். கண்காட்சியில் திமிரி ஒன்றியக் குழு தலைவர் ஜெ.ரமேஷ், தாஜ்புரா செந்தூர் வாழ்வாதார மேம்பாட்டு அறக்கட்டளை தலைவர் அமுதா செல்வம், செயலாளர் கே.குமரேசன், பொருளாளர் வி.ராஜேஸ்வரி, கிளை செயலாளர் பொன்னரசன், வார்டு உறுப்பினர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கணினி ஆசிரியர் எம்.சுரேஷ் நன்றி கூறினார்.


Next Story