மாணவர் பருவத்திலேயே சாதி, மத வேற்றுமைகளை களைய வேண்டும்- நூலக திறப்பு விழாவில் ப.சிதம்பரம் பேச்சு


மாணவர் பருவத்திலேயே சாதி, மத வேற்றுமைகளை களைய வேண்டும்- நூலக திறப்பு விழாவில் ப.சிதம்பரம் பேச்சு
x
தினத்தந்தி 10 Sep 2023 6:45 PM GMT (Updated: 10 Sep 2023 6:47 PM GMT)

மாணவர் பருவத்திலேயே சாதி, மத வேற்றுமைகளை களைய வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.

சிவகங்கை

தேவகோட்டை

மாணவர் பருவத்திலேயே சாதி, மத வேற்றுமைகளை களைய வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.

நூலகம் திறப்பு

தேவகோட்டை அருகே அனுமந்தகுடி அரசு மேல்நிலைப்பள்ளியில் காரைக்குடி மாங்குடி எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.29 லட்சத்து 70 ஆயிரத்தில் கட்டப்பட்ட 2 வகுப்பறைகள், எம்.பி. நிதியில் கட்டப்பட்ட நூலகக்கட்டிடம் ஆகியவற்றை முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

பள்ளி, கல்லூரிகளில் எவ்வளவு படித்தாலும் நூலகங்கள் நம்மை மேம்பட வைக்கும். உலக அறிவைப் பற்றியும் பரந்த மனப்பான்மை வேண்டும் என்றால் நூலகத்திற்கு வந்தால் தான் உண்மை தெரியும். நான் பள்ளியிலும் கல்லூரிகளிலும் படித்த போது நிறைய கற்றுத் தந்தார்கள். ஆனால் நூலகம் தான் எனது அறிவையும் திறமையையும் வளர்த்துக் கொள்ள ஏதுவாக இருந்தது. சிவகங்கை தொகுதியில் இதுவரை 23 நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளன

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாங்குடி எம்.எல்.ஏ., முதன்மைக்கல்வி அலுவலர் பாலுமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர். கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர்கள் அப்பச்சி சபாபதி, பாப்பாங்கோட்டை பூமிநாதன், காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் ஆராவயல் மகேந்திரன், தேவகோட்டை நகர் கிழக்கு தலைவர் வக்கீல் சஞ்சய், தி.மு.க. நகர செயலாளர் பாலமுருகன், கண்ணக்குடி ஒன்றிய தி.மு.க. செயலாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எஸ்.வேலங்குடி

திருப்பத்தூர் அருகே எஸ்.வேலங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து புதிய நூலகம் கட்டப்பட்டு மகாத்மாகாந்தி நூலகம் எனப் பெயரிடப்பட்டு திறப்பு விழா நடந்தது.

விழாவிற்கு ஊராட்சிமன்ற தலைவர் அந்தோணி தலைமை தாங்கினார். .மாவட்ட கல்வி அலுவலர் உதயக்குமார் முன்னிலை வகித்தார். விழாவின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் நூலகத்தினை திறந்து வைத்து பேசினார். அவர் பேசும் போது, பள்ளிப் பருவத்தில் மாணவர்கள் மாதத்திற்கு 2 புத்தகமாவது படிக்க வேண்டும். புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை நேசிக்க வேண்டும். இப்பருவத்தில் சாதி, மத வேற்றுமைகளை களைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

விழாவில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சஞ்சய்காந்தி, வட்டார தலைவர் பன்னீர்செல்வம், கிராம கமிட்டி தலைவர் ஹக்கிம், ஒன்றிய கவுன்சிலர் ராமசாமி, ஊர் அம்பலக்காரர், சண்முகம், வையகளத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் ஜெயராணி, வட்டாரச் செயலாளர் சேதுராமன், பூவாலை, பழனிச்சாமி, தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். விழா முடிவில் ஆசிரியர் சின்னஅழகு நன்றி கூறினார்.


Next Story