கருணாநிதிக்கு வழங்கக்கோரி வழக்கு:பாரத ரத்னா விருைத ேகார்ட்டு பரிந்துரைக்க முடியாது- தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு


கருணாநிதிக்கு வழங்கக்கோரி வழக்கு:பாரத ரத்னா விருைத ேகார்ட்டு பரிந்துரைக்க முடியாது- தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு
x

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க உத்தரவிடக்கோரிய வழக்கில், பாரத ரத்னா விருது குறித்து கோர்ட்டு பரிந்துரைக்க முடியாது என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

மதுரை


முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க உத்தரவிடக்கோரிய வழக்கில், பாரத ரத்னா விருது குறித்து கோர்ட்டு பரிந்துரைக்க முடியாது என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

பாரத ரத்னா விருது

நெல்லையை சேர்ந்த முருகன் என்பவர் மதுரை ஐேகார்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தி.மு.க.வின் முன்னாள் தலைவரும், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி அரசியலில் மட்டும் இன்றி நாடக ஆசிரியர், திரைக்கதை, கவிதைகள் என பல துறைகளில் சிறந்து விளங்கியவர். தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கும், இலவச கல்வி, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை என பல திட்டங்களை அறிமுகப்படுத்தி தமிழகத்தை இந்திய அளவில் முன்னேறிய மாநிலமாக கொண்டு வந்தார்.

மத்திய அரசுடன் இணைந்து நாட்டில் பல திட்டங்கள் மற்றும் தொழில்துறை முன்னேற்றத்துக்கான பணிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். எனவே, கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க முழு தகுதி உள்ளது. அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு உரிய ஆவணங்களுடன் மனு அளிக்கப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

பரிந்துரைக்க முடியாது

இந்த மனு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி குமரப்பன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரதமர் அலுவலக பரிந்துரையின் அடிப்படையில் ஜனாதிபதிதான் பாரத ரத்னாவுக்கான பெயர்களை முடிவு செய்வது வழக்கம் என்று மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து, ஒருவருக்கு பாரத ரத்னா விருது வழங்க கோர்ட்டு பரிந்துரை செய்ய முடியாது. இந்த விவகாரம் கோர்ட்டின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது என்று தெரிவித்து வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story