அரிசி கொள்முதல் குறித்த அரசாணைக்கு தடை கோரி வழக்கு - ஐகோர்ட்டில் அபராதத்துடன் தள்ளுபடி


அரிசி கொள்முதல் குறித்த அரசாணைக்கு தடை கோரி வழக்கு - ஐகோர்ட்டில் அபராதத்துடன் தள்ளுபடி
x

அரிசி கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்த அரசாணைக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு ஐகோர்ட்டில் அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

சென்னை,

இலங்கை மக்களுக்கு வழங்குவதற்காக 40 ஆயிரம் டன் மெட்ரிக் டன் அரிசியை கொள்முதல் செய்ய அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதனிடையே அதிக விலைக்கு அரிசி வாங்கப்படுவதால், அரசாணைக்கு தடை விதிக்கக் கோரி திருவாரூரைச் சேர்ந்த கண்ணன் என்பவர் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

மேலும் டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டத்தை பின்பற்றாமல், அதிக விலைக்கு அரிசி கொள்முதல் செய்வது குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் அவர் கூறியிருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி அபராதத்துடன் தள்ளுபடி செய்தனர்.


Next Story